இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தங்கம்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் நேற்று(02) நிகழ்ந்துள்ளது.
தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின்போதே, இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment