330 மில்லியனை திருப்பிக் கொடுத்த சகோதரி
நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு சகோதரி, அந்நாட்டு பெறுமதியில் தனது வங்கிக் கணக்குக்கு வந்த 330 மில்லியனைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
அது அவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்பட்டிருந்தது..
ஹாஜியா ஆயிஷா இசா யெல்வா தனது கணக்கில் அதிக அளவு பணம் இருப்பதைக் கவனித்த பிறகு, தனது வங்கியைத் தொடர்பு கொள்ளத் தயங்கவில்லை.
அவர் கூறினார், "பணத்தைத் திருப்பித் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஒரு தாய், என் குழந்தைகளின் எதிர்காலம் எனக்கு இதையும்விட முக்கியமானது,"
எனக்கு பண நெருக்கடி இருந்த போதிலும், எனக்குச் சொந்தமில்லாததை நான் சாப்பிட விரும்பவில்லை."
அவரது நேர்மைக்காகவும், அவரைப் போன்று நேர்மையை கடைபிடிப்பவர்களுக்காகவும் அல்லாஹ் அருள் புரியட்டும்..

Post a Comment