சுவிட்சர்லாந்திற்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபம்
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொண்டானா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்ததையும், பலர் காயமடைந்ததையும் அறிந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.
X தளத்தில் வெளியிட்ட பதிவில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு மற்றும் மக்களின் சார்பில் இரங்கலை தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்தினார்.

Post a Comment