ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும், அந்நாட்டு அதிகாரிகளுக்கும் இலங்கை பொலிஸ் சார்பாக விசேட நன்றிகள்
இலங்கை பொலிஸினால், வெளிநாடுகளில் மறைந்து வாழும் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் அடிப்படையில், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரக அரசு பதினொன்று (11) சந்தேகநபர்களை கைது செய்து இந்நாட்டிற்கு ஒப்படைத்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி, மூன்று சந்தேகநபர்கள் இலங்கை பொலிஸின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இதன் சமீபத்திய நிகழ்வாகும்.
உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில், இவ்வாறு சந்தேகநபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக விரைவாக இலங்கைக்கு நாடுகடத்துவதில் வழங்கப்பட்ட ஆதரவும், அதனூடாக வெளிப்பட்ட திறமையான தொழில்முறை செயல்திறனுக்காகவும் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நம்பகமான மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் மேலும் வலுப்படுத்த இலங்கை பொலிஸ் எதிர்பார்க்கிறது.

Post a Comment