Header Ads



நுவரெலியாவில் மிகக்குறைந்த வெப்பநிலை


இன்று (21) காலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும், பண்டாரவளை பிரதேசத்தில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும், பதுளை பிரதேசத்தில் 15.2 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 பாகை செல்சியஸாகக் காணப்பட்டதுடன், அனுராதபுரம் பிரதேசத்தில் 18.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.