அமைச்சர் லால்காந்தவை “நீங்கள் புரூஸ் லீ என்றால், நான் மைக் டைசன். 2 குத்துகள் கொடுத்தால் தரையில் விழுவீர்கள்”
அமைச்சர் லால்காந்தவை “நீங்கள் புரூஸ் லீ என்றால், நான் மைக் டைசன். இரண்டு குத்துகள் கொடுத்தால் தரையில் விழுவீர்கள்” என்று சாமர சம்பத் Mp கூறியுள்ளார்.
159 NPP நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்கள் குறித்து மௌனமாக இருப்பதாகவும், அவர்கள் மக்களின் பிரச்சினைகளை பேசாமல் கல் சிலைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனக்கு எதிராக தற்போது 14 நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த சாமர, சமீபத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், உயர் நீதிமன்றம் மற்றும் பதுளை நீதாவன் நீதிமன்றம் ஆகியவற்றில் கூடுதல் விசாரணைகள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சட்டச் சவால்களுக்கிடையிலும், மக்களுக்காக குரல் கொடுப்பதைத் தொடருவேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment