6 மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவன் கைது
வாடகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பலங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்குபவர்களிடமிருந்து குறித்த சந்தேகநபர் சில மாதங்களுக்கு எனத் தெரிவித்தே மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளதாகவும், அந்தக் காரணத்தைக் கூறி அவற்றின் பதிவுப் புத்தகங்களையும் உரிமையாளர்களிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டு சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் கைது செய்யப்படும்போது, விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்ற பொலிஸாரால் முடிந்துள்ளது.

Post a Comment