Header Ads



சேஹ் ஹசீனாக்கு அடைக்கலம் கொடுக்க முடியுமென்றால், ஏன் முஷ்தஃபிசூர் ரஹ்மானை விளையாட அனுமதிக்க முடியாது..?


பங்களாதேஷில் நடந்த வன்முறைக்கு எதிராக, பிசிசிஐ பங்களாதேஷ் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஷ்தஃபிசூர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது.  இந்தநிலையில் இந்த முடிவு, இந்தியாவில் எழுந்த கடும் எதிர்ப்புகளின் பின்னணியில் எடுக்கப்பட்டது. 


மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 


 இதேவேளை சேக் ஹசீனாக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுக்க முடியுமென்றால், ஏன் முஷ்தஃபிசூர் ரஹ்மானை விளையாட அனுமதிக்க முடியாதென, சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.