Header Ads



டித்வா புயல் - 22 நாடுகளிலிருந்து உதவி


டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 


இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்புக்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழு, பல சந்தர்ப்பங்களில் ஒன்றுகூடி நிவாரணப் பணிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை அதிகபட்ச வினைத்திறனை உறுதி செய்ய தேவையான தீர்மானங்களை எடுத்துள்ளது. 


இதற்கமைய, விமான நிலையம், துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.