Header Ads



விபத்தில் தாயும், பிள்ளைகளும் பலி


தெஹியத்தகண்டிய-மஹியங்கனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.


தந்தை மட்டும் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஏனையவர்கள் ஒன்றாகவே உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த 17ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் தாயும் பிள்ளையும் ஸ்தலத்தில் பலியானதுடன், மற்றுமொரு பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


குடும்பமாக முச்சக்கர வண்டியில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதியான தந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


விபத்தில் டிஸ்னா ஐரங்கனி என்ற இளம் தாயும் 10 வயதான பிம்சார சதேவ் அபேவர்தன, 4 வயதான செத்மினா டின்ஷான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் உயிரிழந்த மாணவன், புலமைப்பரிசில் தேர்வில் 163 மதிப்பெண்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்த திறமையானவர் என பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார். .


குறித்த மாணவனுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நாம் எண்ணியிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கவலை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.