Header Ads



கொழும்பு மாநகர வரவுசெலவு திட்டத்தால் மாத்திரம் முழு நாட்டின் ஆட்சியையும் மாற்றி விட முடியாது


முஜிபுர் ரஹ்மான் இனிமேல் தமது தரப்பினரே கொழும்பின் மேயர் எனக் கூறியிருக்கிறார். எந்த அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்பது எமக்கு தெரியாது. வரவுசெலவு திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் அதனை சமர்ப்பிக்க முடியும். 


மீண்டும் தோல்வியடைந்தால் தலைவர் மற்றும் மேயர் தொடர்ந்தும் 2 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க முடியும் என்பதே சட்டமாகும். மாறாக கொழும்புக்கு மாத்திரம் வேறு சட்டம் இல்லை. இன்னும் இரு வாரங்களில் மீண்டும் வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, அதனை நிறைவேற்ற முடியும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளிப்பர் என நம்புகின்றோம். 


கொழும்பு மாநகர சபையின் வரவுசெலவு திட்டத்தால் மாத்திரம் முழு நாட்டின் ஆட்சியையும் மாற்றி விட முடியாது


அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

No comments

Powered by Blogger.