'குடு ரொஷான்' கைது
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராகக் கருதப்படும் 'குடு ரொஷான்' என்பவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 9 மில்லிமீற்றர் வகை துப்பாக்கி ஒன்றையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. மேலதிக விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment