Header Ads



இலங்கையர்கள் இவ்வருடத்தில் அதிகம், கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் எது..?


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 223,423 மோட்டார் சைக்கிள்கள் 2025 ஆம் ஆண்டின் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். 


அதற்கு அடுத்தபடியாக 55,338 கார்களும், 13,850 முச்சக்கர வண்டிகளும், இந்த அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக 35,268 மின்சார வாகனங்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


அதற்கமைய, இந்த வருடம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்குகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


திணைக்களத்திற்கு இந்த வருட இலக்காக 16 பில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த இலக்கையும் தாண்டி கடந்த நவம்பர் 30 ஆம் திகதி 17.8 பில்லியன் ரூபாய் வருமானத்தை திணைக்களத்தால் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


எதிர்வரும் ஆண்டிற்காக 18 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை திறைசேரி திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாகவும், அந்த இலக்கையும் அடைய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு முடியும் எனவும் அவர் மேலும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.