Header Ads



NPP யின் பதியதலாவ பட்ஜட் தோல்வி - தனமல்விலயில் தப்பியது


தேசிய மக்கள் சக்தியின் பதியதலாவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. 


பிரதேச சபையின் தவிசாளர் அனுர ராஜபக்ஷவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதில் வரவு செலவுத் திட்டத்திற்குச் ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. 


பதியதலாவ பிரதேச சபையின் மொத்த சபை அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆகும். 


இதேவேளை, தனமல்வில பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன. 


வாக்குகள் சமனானதன் காரணமாக, அதன் பின்னர் தவிசாளரின் வாக்கையும் பெற வேண்டியிருந்தது. 


அதன்படி, தவிசாளரின் வாக்கு கிடைத்த பின்னர், தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட தனமல்வில பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றிப் பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.