இஸ்ரேலில் இலங்கையர் படுகொலை
கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற, இலங்கை - காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொலையாளி 2 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய காவல்துறையினர் இன்டர்போல் பிரிவுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment