Header Ads



போதைப் பொருளுடன் யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது


யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட  ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.


குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.


மேற்படி சந்தேக நபரை திங்கட்கிழமை (17) அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை  எதிர்வரும் 30 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments

Powered by Blogger.