புத்தளம் - சிலாபம் பிரதேச புதிய காதி நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி)
புத்தளம் - சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான காதி நீதிபதி நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
புத்தளம் - சிலாபம் பிரதேசத்திற்கான காதி நீதிபதிக்கான வெற்றிடம் நீண்ட காலமாக காணப்பட்டதுடன், புதிய காதி நீதிபதியை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையும் நடாத்தப்பட்டது. இதனடிப்படையில் புத்தளம் - சிலாபம் பிரதேச புதிய காதி நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நிமிக்கப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், குருநாகல் உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் மௌலவி அல்ஆலிம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
மேலும், இடம்பெயர்ந்தோருக்கான காதி நீதிமன்றம் மற்றும் புத்தளம் காதி நீதிமன்றம் என்பனவற்றில் பல வருடங்களாக ஜூரியாக கடமையாற்றிய இவர், புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆ மஸ்ஜிதின் பிரதம இமாமாகவும், நாகவில்லு புஹாரியா அரபுக் கல்லூரியின் அதிபராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.
- ரஸீன் ரஸ்மின் -

Post a Comment