இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலில், பல உயிர்களை காப்பாற்ற பேராடிய சமீர் ஜிடௌனி
இங்கிலாந்தில் ஒரு பெரிய கத்திக்குத்து தாக்குதலின் போது, தாக்குதல் நடத்தியவரை துணிச்சலுடன் எதிர்கொண்ட ஹீரோவாக 48 வயதான LNER ரயில் ஊழியரான சமீர் ஜிடௌனி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பயணிகளைப் பாதுகாக்க அவர் போரடியுள்ளார். அவரது செயல்கள் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியதாக காவல்துறையினரும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளன.
அவர் ஒரு பிரிட்டிஷ் - அரபு மற்றும் அல்ஜீரிய முஸ்லிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது சமீர் ஜிடௌனி படுகாயமடைந்தார்.
சமீரின் துணிச்சலான செயல்களை நேரில் கண்டவர்கள் பாராட்டியுள்ளதோடு, பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை அவரது செயல் 'வீரத்திற்குக் குறைவில்லாதது என்று வர்ணித்துள்ளது. பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக அவரைப் புகழ்ந்துள்ளது.

Post a Comment