பாலஸ்தீத்தை ஆதரிக்கின்ற ஐரோப்பிய பெண், குழந்தை பிறந்ததும் செய்த செயல்
பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஆதரிக்கின்ற இந்த, ஐரோப்பிய ஸ்லோவேகிய பெண்மணிக்குக் குழந்தை பிறந்ததும், செய்த செயல் இன்று உலகெங்கும் வைரலாகி இருக்கின்றது.
பிறந்து ஒரு சில நிமிடங்களே ஆன தன்னுடைய குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு அதன் மீது பாலஸ்தீனத்து விடுதலைப் போராட்டத்தின் அடையாளமான கிஃபாயா துணியைப் போர்த்தி மகிழ்ந்திருக்கின்றார் இந்தப் பெண்மணி.
பாலஸ்தீனத்தை ஆதரிப்பது பேஷனாகிவிட்டதோ என்பதா? மக்கள் மனங்களில் மிகப் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதா?
உலக அரங்கில் வீரஞ் செறிந்த மக்களும் தேசமும் தனி இடத்தைப் பெற்று ஓங்கி நிற்கின்றார்கள் என்பதா?
இதனால் என்ன பயன்?
போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அந்தக் கொடுமைக்கார பிரதமர் தண்டிக்கப்படுவதற்கு இது உதவுமா?
அப்பாவிகள் மீதான தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், புல்டோசர் இடிப்புகள் போன்றவற்றை நிறுத்துவதற்கு இது துணை போகுமா?
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
Azeez Luthfullah

Post a Comment