Header Ads



நாடு முழுவதும் அவசரகால நிலைமை பிரகடனம்


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார். 


பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, நேற்று வெள்ளிக்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.