முஸ்லிம் சேவை, தற்போது விளம்பர சேவையாக மாறிவருகிறது
முஸ்லிம்கள் அதிகம் விரும்பி கேட்டுவரும் வாலொலியாக SLBC முஸ்லிம் சேவை இருந்து வருகிறது. என்றாலும் அதன் சேவையில் அதிகமான நேரம் விளம்பரங்களே ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அதனால் முஸ்லிம் சேவை தற்போது விளம்பர சேவையாக மாறிவருகிறது. கூட்டுத்தாபனத்தின் வருமானத்துக்கு விளம்பரம் அவசியம்.
அப்படியென்றால் அதன் நிகழ்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதன் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். முஸ்லிம் சேவையை மேலும் பலப்படுத்தி, அதன் நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம், அண்மையில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவரை சந்தித்து, பல் ஆலாேசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை கையளித்திருக்கிறது. அந்த கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
எனவே, அவர்களின் ஆலாேசனைகளை கருத்திற்கொண்டு, முஸ்லிம் சேவையை சிறந்த சேவையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஊடக அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
- பாராளுமன்றத்தில் ரிஷாத் பதியுதீன் Mp -

Post a Comment