Header Ads



அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தொடர்பில், அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்


அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்குமளவுக்கு தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பாரதூரமானதாக இல்லை. நம்பகமான அச்சுறுத்தல்கள் இருக்குமானால், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.


அச்சுறுத்தல் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாணக்கியன் Mp மற்றும்  ஜகத் விதான Mp ஆகியோருக்கு தற்காலிகப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரும் அச்சுறுத்தல்கள் அவர்களின் பொதுப் பணிகளிலிருந்து வருகிறதா அல்லது தொடர்பில்லாத சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து வருகிறதா என்பது குறித்து தனக்கு நிச்சயமற்ற நிலை இருப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.