சட்டம் ஒழுங்கு குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது - சஜித்
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியின் கிழக்கு மாளிகாவத்தை மற்றும் கெத்தாராம வட்டாரங்களை சேர்ந்த மக்களின் பங்கேற்புடனான மக்கள் சந்திப்பொன்று நேற்று (31) மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இந்த மக்கள் சந்திப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இப்பிரதேசங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது, அவர்கள் வீடு திரும்புவார்களா இல்லையா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லா நிலை காணப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமா அல்லது கொலை நடக்குமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்நாட்டு மக்கள் இன்று சமூகப் பாதுகாப்பைக் கூட இழந்துவிட்டனர். தேசிய பாதுகாப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்த அரசாங்கத்தின் திறமையின்மையால், சட்டம் ஒழுங்கு குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் முழு நாட்டிலும் அச்சமும் சந்தேகமும் நிலவுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Post a Comment