இஸ்ரேலில் கழுத்து துண்டிக்கப்பட்ட இலங்கையரின் உடல் நாட்டுக்கு வருகிறது
இஸ்ரேலில் கழுத்து துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உடல் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பரில் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி உடல் தடயவியல் மருத்துவ நிறுவனத்தில் இருப்பதாகவும்,உடலை இந்த நாட்டிற்குக் கொண்டுவர சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும், தூதரகம் அந்த பணத்தைச் செலவழித்து உடலை கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் தூதர் தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 26,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 1,000 பேர் வரவிருப்பதாகவும் தூதர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment