Header Ads



பலஸ்தீனத்திற்கு இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவை உறுதிப்படுத்திய விஜித ஹேரத்


பலஸ்தீனப் பிரச்சினைக்கு இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.


சவூதி  -  ரியாத்தில் அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானுக்கும் இடையே நடந்த சந்திப்பின் போது இது தெரிவிக்கப்பட்டது.


பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வைக் கண்டறிவதில் சவுதி அரேபியாவின் முன்னணிப் பங்கை அமைச்சர் ஹார்த் பாராட்டியுள்ளார்.


26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் ஹெரத் தற்போது சவுதி அரேபியாவில் உள்ளார்.

No comments

Powered by Blogger.