140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கையின் தேயிலை
இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 90 சதவீதம் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிலோன் தேயிலையின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காக சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கின்றது. அரசாங்கம் என்ற வகையில், இந்த முன்னேற்றத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம். 2030ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை மற்றும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமான இலக்கை அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டது. இதில் நாளாந்த அடிப்படை ஊதியம் 1,550 ரூபாவாக அதிகரிப்பதோடு, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட 200 ரூபாய் நாளாந்த வருகை ஊக்குவிப்புச் சலுகையும் அடங்கும். இது 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
பிரதமர் ஹரினி அமரசூரிய

Post a Comment