மேல் மாகாண ஆளுநர், பிரதி சபாநயகர், 2 பிரதியசை்சர்கள் முஸ்லிம்களாக உள்ளனர் - ரில்வின் சில்வா
கே. வடகிழக்கு வாழ் மக்களுக்கு உங்கள் கட்சியின் ஏதும் ஓர் அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பதில் உடன்பாடு ஒன்றில் உள்ளதா?
ப. இலங்கை ஜனநாயக முறையில் அவர்களது சகல உரிமைகளும் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். அதை ஐக்கியமாக இந்த பிரச்சினைகளை தீர்த்தல் வேண்டும். தற்பொழுது உள்ள மாகாண சபை ஆட்சி முறைமை சிறந்த தீர்வாக அமைய வில்லை.
இந்த மாகாண முறைமை விட சிறந்த சக்தி மிக்க ஓர் தீர்வினை அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குதல் வேண்டும். அந்த தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வரை இந்த மாகாண சபை முறைமை கொண்டு செல்வோம். நாங்கள் புதிய அரசியல் தீர்விற்கான புதிய அரசியலமைப்பு செயற்படுத்தும் போது வட கிழக்கு வாழ் மக்களுக்கு புதிய அரசியல் அதிகாரங்கள் பற்றி கவனத்திற்கு எடுப்போம்.. அந்த மக்கள் கருத்து அவர்களது மும்மொழிவுகளுடன் தான் நாங்கள் புதிய அரசியலமைப்பு தீர்வினை செயல்படுத்துவோம்
.
கே. நேற்று முன்தினம் ஜனாதிபதி முன் வைத்த வரவு செலவுத் திட்டத்தில் கூட மாகாணசபை தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அத்தேர்தலை நடத்துவீர்களா?
ப. ஆம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் ஆனால் அதில் சில சட்ட சீர் சீர்திருத்த குறைபாடுகள் உள்ளன அது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அதை அவர் மரணிக்கச் செய்துள்ளார்.ஆகவே அதனை நடாத்துவதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை பெற்று அதன்படி அடுத்த ஆண்டில் இன்றைய தினம் ஓர் தினத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இருந்து என்.வி.பி உள்ளுராட்சித் தேர்தலின் போது இக் கட்சியின் ஆதரவு வடகிழக்கில் ஆதரவு குறைந்து சென்றுள்ளது. ? அதற்கு காரணம் என்ன ?
ப. உள்ளுராட்சித் தேர்தலில் பிரதேசத்தில் உள்ள ஒருவரின் ஆதரவு அப்பிரதேச அரசியல் குறிப்பாக வட கிழக்கில் சிறிய சிறிய கட்சிகளுக்கு செல்வது தான் வழமை அதனைக் காரணமாக கொள்ளலாம் ஆனால் எமது இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஓர் கட்சியான் என.வி.பி கட்சி இலங்கையில் வட கிழக்கு தெற்கு மலையகம் என முதல் சகல இன மக்கள் மனதினை வென்றுள்ளது
கடந்த அரசியல் வரலாற்றில் 76 ஆண்டுகளில் இவ்வாறு நடைபெற்றது இல்லை. கடந்த காலத்தில் சில கட்சிகள் வடக்கு , கிழக்கில் மலையகத்தில் உள்ள அரசியல் அதிகாரம் உள்ள கட்சிகளுக்கு வரப்பிரதாசம் வழங்கி அல்லது அமைச்சர் பதவி கொடுத்து தான் ஆட்சி அதிகாரத்திற்கு சேர்த்துக் கொள்வார்கள். இம்முறை அவ்வாறு இல்லை எ்ன.வி.பி வடக்கிலும் வென்றது. கிழக்கில் மட்களப்பு தவிர . மலையகத்திலும் வென்றது.இதுதான் எமது அரசியல் வரலாற்றில் முதல் தடவையாகும். அதுதான் நாங்கள் தொடர்ந்து இதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
அவரவர் இன தலைவரை தெரிவு செய்ய முன்னர் ஒரு தலைவரை நாம் அனைவரும் தேசிய ரீதியில் தேர்ந்தெடுக்க வேண்டும். எமது இந்த என்.வி.பி என்பது சிங்களம் கட்சி அல்ல அது இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களையும் இணைத்துக் கொண்ட தேசியக் கட்சியாகும். இக்கட்சி சிங்கள, தமிழ், முஸ்லிம் சகலருக்கும் சொந்தமான கட்சியாகும்
இதில் அரசியலை எதிர்காலத்தில் நாம் கொண்டு செல்லுதல் வேண்டும். அதை நாம் உடைக்காமல் நாங்கள் தேசிய அரசியல் பிரச்சினைக்கு மட்டும் தான் அதிகாரம் எனச் சொல்வதை விட வேறு சில பிரச்சனைகளை நாம் தீர்க்க வேண்டும். முதலில் இனத் துவேசத்தை நாங்கள் இந்த நாட்டிலிருந்து நிறுத்தியுள்ளோம். அதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் ”சிறிலங்கன் டே” இலங்கையர்” நாள் என்ற ஒரு நிகழ்வினை நடத்தவுள்ளோம். சகல சமூகங்களும் ஒன்று திரட்டி நடத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது மத கலாச்சார நிகழ்வுகள் உள்ளன.
தமிழர்களுக்கான , புதுவருடம், சிங்களவர்களுக்கு வெசாக், முஸ்லிம்கள் பெருநாட்கள் என விசேட நிகழ்வுகள் , கிரிஸ்த்தவர்கள் கிறிஸ்மஸ் போன்ற நிகழ்வுகள் இருக்கிறது. ஆனால் சகல சமூகங்களும் ஓர் இடத்தில் இருந்து கொண்டாடக் கூடிய தினங்கள் இந்த நாட்டில் இல்லை. இதனால் நாம் நிகழ்வுகளிலும் இருந்துள்ளோம். நாம் நிகழ்வுகளிலிருந்து வேறுபட்டு உள்ளோம். நமது கலை கலாச்சாரங்கள் இருந்து விலகி உள்ளோம். அடுத்த சகோதரர்கள் எமது நிகழ்வுகள் தெரியாமல் உள்ளோம்.
அதற்காகவே டிசம்பர் மாதத்தில் தேசிய ரீதியில் சகல சமூகங்களும் ஒரு மேடையில் இருந்து கொண்டு சகல சமூகங்களும் நிகழ்வுகளும் ஒரே மேடையில் இருத்தல் வேண்டும்.
நீங்கள் சொல்வது சரி பாடசாலை மட்டத்தில் இருந்து முஸ்லிம் பாடசாலை இந்து பாடசாலை சிங்கள பாடசாலை கிறிஸ்தவ பாடசாலை என பாடசாலை மட்டத்திலிருந்து எங்களை முன்னைய அரசியல் வாதிகள் பாடசாலைகள் மட்டத்திலிருந்து பிரித்து வைத்துள்ளார்கள். ஆனால் அடுத்த சகோதரர்கள் கலை மத மொழிகள், கலாச்சாரங்கள் எமக்குத் தெரியாது. ஆகவே ஓர் பாடசாலை நிறுவி அதில் சகல சமூகங்களும் கல்வி கற்கக் கூடிய நிலையில் நாம் ஒன்றாக இருந்து கல்வி கற்க வேண்டும்.
அகவே தான் இன மத வேறுபாடுகள் இன்றி ஒன்றாக நாம் சிறப்பாக பயணிக்க முடியும். இலங்கையன் எனற ரீதியில் நாம் பயணிப்போம்.பாடசாலையிலிருந்து பிரித்து வைத்ததை ஒன்றுபடுத்துவோம். அது மட்டுமல்ல எமது பிற்ப்புச் சான்றிதழ் கூட இலங்கைச் சிங்களவர் , முஸ்லிம் ஹிந்து என எமது பிறப்பிலேயே எம்மைப் பிரித்து வைத்துள்ளார்கள். இனி இலங்கையன் என்றுதான் அந்த பிறப்பு பதிவில் இருத்தல் வேண்டும்.
அதே போன்று தொழில் , கல்வி பொருளாதாரத்தில் வேறுபாடுகள் உள்ளது. வடக்கில் பொருளாதாரம் செல்லாவிட்டால் கிழக்கிற்கு பொருளாதாரம் செல்லா விட்டால் ம்னனாரில் பொருளாதாரம் செல்ல விட்டால் இந்த நாட்டில் பொருளாதாரத்தின் மேம்படுத்துவதில் ஒர் பிரயோசனமும் இல்லை. ஆகவே கொழும்பினையும் , மேல் மாகாணத்தினை மட்டும் கேந்திரமாக வைத்துக் கொண்டு பொருளாத்தினை செயற்படுத்துவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. எமது பொருளாதாரம் கிழக்குமாகாணம் மொன்றாகாலை சியாம்பலண்டுவ போன்ற குறைந்த பொருளாதாரத்தில் உள்ள பிரதேசத்தறகும் செல்லல் வேண்டும். அந்த மக்களும் அதில பங்குதாரர்களாக வேண்டும். 30 இலட்சம் சுற்றுலாத்துறையினர் இலங்கையில் இலக்கினை கொண்டு 20 இலட்சம் பேர் இலங்கை வந்துள்ளார்கள். அவர்கள் தெற்கு மட்டும் செல்லாது வட கிழக்கும் செல்வதற்கு அந்த பிரதேசங்களும் இத்துறையில் அபிவிருத்தி செய்தல் வேண்டும். ஆகவே அப்பிரதேச வாசியும் அதில் வருமானம் பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்தல் வேண்டும்.
கே. அமைச்சரவையில் உங்களது கட்சி ஏன் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியவில்லை அதற்கான காரணம் என்ன ?
ப. கெபினட் முறைமை பழைய முறைமையிலிருந்து மாற்றுதல் வேண்டும். முன்னைய கட்சிகள் சிறிய கட்சி ஒன்றை ஆட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவார்கள். அவரது சேவை அந்தப் பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும். அவ்வாறு இல்லாமல் வடக்கில் சந்திரசேகர் அமைச்சராக உள்ளார், அதே போன்று முஸ்லிம் ஒருவர் மேல் மாகாண ஆளுனநர் உள்ளார், பிரதிசபாநயகர் ஒருவர் மற்றும் இரண்டு முஸ்லிம்கள் பிரதியசை்சராகவும் உள்ளனர். அதற்காக இனம் மத பார்க்காமல் அவருக்கு சிறந்த ஆளுமை , அறிவு அவ்விடயத்தில் சிறந்த விசேடத்துவம் இருந்தால் அவர் தமிழ்ர் முஸ்லிமாக இருப்பவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை. சிறந்த ஆளுமை இருந்தால் அவரை அமைச்சராக நியமிப்போம் கடந்த அரசியல் வரலாற்றினை நாங்கள் மறப்போம்.
கே. சிறுபான்மை இனங்கள் தொழில் அபிவிருத்தி வீடமைப்பு,திட்டங்கள் கிடைக்கும்போது தமிழ் பேசும் மக்களுக்கு சரி சமாக கிடைப்பதில்லை பழைய காலத்திலிருந்தவாறு அவரவர் இன விகிதசார அடிப்படையில் தொழில்கள் அபிவிருத்திகளை வழங்கினால் என்ன ?
ப. எங்களது கொள்கை நாட்டில் அரசாங்கம் அபிவிருத்திகள் தொழில்கள் வழங்கும்போது .இந்த நாட்டில் வாழும் சகல தொழில் இல்லாதவர்களுக்கும் நுாற்றுக்கு நுாறு வீதம் அதனை வழங்கல் வேண்டும் . உதாரணமாக 100 தொழில் அற்றோர்கள் இருக்கிறார்கள் 50 பேருக்குத்தான் வெற்றிடம் இருக்கின்றது என்றால் அந்த நிலையில் இன விகிதாசாரம் தேவைதான் தொழில் இல்லாத நுாறு பேருக்கும் வழங்க வேண்டும் என்பதே எமது நிலப்பாடு .இனவிகிதசார அடிப்படையில் தொழில் வழங்கப்போனால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படலாம். தகுதி தராதரம் இருப்பவர்கள் அனைவருக்கும் தொழில் வழங்கல் வேண்டும்.
மற்றைய பிரச்சினை வட கிழக்கில் பொலிஸ் அல்லது பாதுகாப்புத்துறையில் ஆட்சேர்க்கும்போது அந்த பிரதேச தமிழ் பேசும் மக்கள் நன்கு உணரபப்பட்டு அவர்கள் அந்த தொழிலுக்கு விண்ணப்பித்து அத்துறையில் இணைந்து கொள்ள வேண்டும். அதனால் அப்பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு கடமையில் தமிழ் செயலாற்ற முடியும். சிங்களவர்கள் சிங்களத்தில் படித்து தமிழ் பிரதேசத்தில் செயலாற்றுவது கஸ்டமானதான விடயமாகும்.
நான் கல்முனையில் பிறந்தவன் தமிழ் மொழி மூலம் படித்தவன் ,ஆனால் கடந்த 35 வருடமாக கொழும்பில் சிங்கள தமிழ் மொழியில் கடமையாற்றுகின்றேன். எனது தந்தை சம்மாந்துறை தொழில் நுடப்க் கல்லுாாியில் அதிபராக இருந்தார் அவர் தெஹிவளை மருதானை தொழில்நுடப்க் கல்லுாாியில் அதிபராக கடமையாற்றினார் அவரது தலைமைத்துவத்தினை பெருபாண்மை சிங்கள மொழியினர் ஏற்றுக் கொண்டனர்
ப. அதையே நாங்களும் எதிர்பார்க்கின்றோம் எந்த இனமானாலும் தலைமைத்துவத்திற்கு இனம்.மதம் . மொழி ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது
கே.உங்கள் கட்சியான ஜே.வி பியின் ஏராளமான தொண்டர்கள் கடந்த காலத்தில் காணாமலும், கொலைசெய்யப்பட்டும் இருந்தார்கள் அதுபற்றி உங்கள் கட்சி எடுத்திருக்கும் தீர்மானம் என்ன ?
ப. எங்கள் கட்சி மட்டும் தொண்டர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கூட பலர் காணாமல் போயுள்ளனர், வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதனை சகல மட்டத்திலும் நாங்கள் தேடிப் பார்த்து அதற்கான ஒர் பரிசோதனை நடத்தி அதற்கு ஓர் கமிஷன் அமைத்து அதனூடாகவே நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இந்தக் கட்சி இந்த நிலைக்கு வருவதற்கு இந்த நாட்டில் நாங்கள் நல்லதைச் செய்ய வேண்டும். அதனையே மக்கள் அனுபவித்தல் வேண்டும். அதற்காக நாங்கள் தனது வாழ்வினையும் உயிரையும் சிந்தியுள்ளோம்.
இக் கட்சிகளுக்கும் ஓர் பொது இலக்கை நோக்கித்தான் எங்களை அர்ப்பணித்தோம். அந்த பொது இலக்கை அடைவதே தான் எமது பெரிய இலக்காகும். அதை விட்டுவிட்டு நாம் தனித்தனியாக எமது தொண்டர்கள் அல்லது அவர்களது சொந்தங்களுக்கு அரச தொழில் வழங்குவது அல்லது வீடு கட்டிக் கொடுப்பதற்காக அல்ல எமது அர்ப்பணிப்புக்கள். ஓர் பொது இலக்கை நோக்கித் தான் நாம் முன் செல்வது தான் எங்களது இலக்காகும்.
கே. 1974 களில் ஜே.வி.பி புரட்சிகள் நடைபெற்றது அது பற்றி உங்கள் கட்சி எதனை எதிர்பார்த்தது.?
ப..நாம் ஓர் ஜனநாயகமாக செல்கின்றோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் இவ்வாறு தான் சிறந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் முன் வைத்தால் பொது இலக்காக இருந்தாலும் அதற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் எங்களுக்கு இந்த நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது. எங்களால் முடிந்தது ஜனநாயக ரீதியில் பொது இலக்கை அடிப்படையாகக் கொண்டு எங்களது விஞ்ஞாபனத்தில் சமமாக மக்கள் முன் வைத்து அவர்களது பெரும்பான்மை ஆதரவினைப் பெற்றோம். அதை நாங்கள் வெற்றி பெற்றோம். நாளையானாலும் பொது இலக்கை அடைவதே எமது நோக்கு அது மக்கள் ஊடாக அவர்களது மனதினை வென்ற நாங்கள் அதற்கு முன் நிற்போம்.
கே. சிலர் கூறுவது போன்று உங்கள் ஜே.வி.பி கொள்கையை விட்டு நீங்கள் வேறு இலக்கினை செல்கின்றீர்கள் அதுபற்றி உங்கள் கருத்து என்ன,?
ப. நாங்கள் 1975 ஆம் ஆண்டு இருந்த கொள்கை தற்பொழுதும் உள்ளது.அதை கொண்டு செல்லவே எமக்கு ஆதரவு தேவைப்பட்டது. அதற்கு பாராளுமன்ற ஆட்சி பலத்தை பெறுவதா ? அல்லது மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் புரட்சி செய்து ஆட்சியைப் பெறுவதா ? நாங்கள் ஜனநாயக முறையில் மக்கள் ஆதரவு பெறுவது எமது இலக்காகும்.
,
கே. உங்களது கட்சி ஜே.வி.பி தான் பழைய கட்சியாகும் ஆனால் தாங்கள் தற்பொழுது என்.வி.பி கட்சி ஊடாகவே ஆட்சிக்கு பெற்றுள்ளீர்கள்.
பழைய கட்சி விட்டு புதிய கட்சியில் தான் தொடர்ந்து செல்வீர்களா ?
ப. இந்த நாட்டின் ஜனநாயக சகல ஆட்சியையும் பெற்றுள்ள கட்சி என்.வி.பிதான் அதனைத் தான் நாங்கள் இன்னும் சக்திமிக்க கட்சியாக கொண்டு செல்ல வேண்டும்.ஜனாதிபதி ஆட்சி, பாராளுமன்றம், உள்ளுராட்சி ஆட்சிகளை கைப்பற்றியது இந்த என்.வி.பி கட்சிதான் அதனை இன்னும் முன் கொண்டு செல்வோம்.அதற்குள் ஜே.வி.பியும் நாங்கள் சக்திமிக்க கட்சியாகவும் கொண்டு செல்ல வேண்டும். கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் பாடங்கள் சொல்லிக் கொடுத்தல் எவ்வாறு நாம் மக்களுக்கு சிறந்த ஆட்சியைக் கொண்டு செல்லுதல் என்ற புதிய கட்சி கொள்கைகளை தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும். இரண்டு கட்சிகளுக்கிடையே பிரிவினை இல்லை இரண்டு ஒரே பாதையில் செல்லும்.
ஜே.வி.பி கட்சியை முன்னெடுத்துச் சென்று அதனுடாக தமது வாழ்வினை அர்ப்பணித்தவர்கள் எங்களுக்கு அரசியல் கற்று தந்தவர்கள் மறந்து அவர்களது கொள்கைகளை அழித்து நாங்கள் இக் கட்சியை அழிக்க முடியாது. இக் கட்சிக்காக எங்களுக்கு கற்றுத் தந்த பாடங்கள் தான் இந்த நிலைக்கு நாங்கள் வருவதற்கு மூல காரணமாகும். இதற்காக எங்களது பழைய அரசியல் வாழ்வினை வேறு ஓர் புத்தகம் எழுத வேண்டும்
எமது தோழர் ரோகன விஜய வீர தொட்டு பல சகோதரர்கள் நாங்கள் மறைக்க முடியாது. அவர்களது சகல அரசியல் நடவடிக்கையும் எங்கள் மனதில் இன்றும் உள்ளது. அவர்களது சில கொள்கை சில மாற்றங்கள் கொண்டு வந்தோம்.
கே. உங்கள் ஜே.வி.பி புரட்சி காலத்தில் இறந்தவர்கள் அவர்களது குடும்பத்திற்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகின்றீர்கள்?
ப. நாங்கள் தனிப்பட்ட வாசிகளுக்காக அரசியல் செய்யவில்லை ஒரு பொது இலக்கை வைத்து புரட்சிகள் நடைபெற்றது. இன்றும் தமது சொந்தங்களை இழந்தவர்கள் வந்து ஒருபோதும் அதற்காக தற்பொழுது ஆட்சியில் இருக்கும் போது நிவாரணம் கேட்பதில்லை. நாம் கட்சி ரீதியில் முடியுமான அளவு உதவி செய்துள்ளோம். அந்தக் குடும்பங்களுக்கான சில குடும்பங்களில் இன்றும் அவர்களது தகவல்களை ஒன்று சேர்க்கின்றோம் அவர்கள் எமது கட்சியை தொடர்பாக இருந்து வந்தார்கள்.
கே. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை வெளிநாடுகளுடனான தொடர்புகள் மற்றும் ஜ.எம்.எப் எங்களை இடை நடுவில் விட்டுவிட்டு செல்வார்கள் புதிய கல்விக் கொள்கை மற்றும் கலாச்சாரங்கள் பொருளாதார முதலாளித்துவம் போன்ற வேறுபாடுகள் வரும் என தேர்தல் காலங்களில் ஏனைய கட்சிகள் மேடைப் பேச்சில் தெரிவித்தார் ? அது பற்றிய உங்கள் கருத்து என்ன
ப. அதில் உண்மையும் இருக்கிறது. இதில் மக்கள் ஆட்சிப் பொறுப்பினை எனக்கு தந்துள்ளார்கள். அது காலத்திற்கு ஏற்ப மாற்றுவோம். நாங்கள் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வருகிறோம். காலம் போகப் போக மக்கள் எமது ஆட்சி அதிகாரத்தில் நன்மையா தீமையா என்பதை தீர்மானிப்பார்கள் இது தான் ஜனநாயகம்.
(அஷ்ரப் ஏ சமத் )
Post a Comment