கேரள சட்டமன்ற உறுப்பினர் ஜமீலா மரணம்
இந்தியா - கேரள மாநிலம் கொயிலாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கானத்தில் ஜமீலா மரணம்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே மாணவர் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்.. தேர்தல் அரசியலில் பங்கேற்க முஸ்லிம் சமூகத்தின் பெண்கள் தயங்கிய ஆரம்ப காலத்தில் 1995ல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கிராம பஞ்சாயத்து தலைவரானவர்.
பின்னர் 2005 - 10 வரை சேலன்னூர் பிளாக் பஞ்சாயத்து தலைவராகவும், 2010 - 15 மற்றும் 2019 - 21 வரை இரண்டு தடவை கோழிக்கோடு மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் சிறப்பான முறையில் பதவி வகித்தவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஜனநாயக மாதர் சங்கம் உட்பட மக்களின் குரலாக ஒலித்தவர், தற்போது கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.
2021 பொதுத்தேர்தலில் கொய்லாண்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கானத்தில் ஜமீலா மலபார் பகுதியின் முதல் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ எனும் பெருமையும் இவருக்குண்டு.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர். இன்று 29.11.25 மாலையில் வஃபாத் ஆனார்.
அல்லாஹ் மஃபிறத் அருள்வானாக
Colachel Azheem

Post a Comment