மன்னார் மாவட்டத்தில் எவ்விதத் தொடர்புமின்றி 310 பேர்
மன்னார் மாவட்டத்தில் சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் Mp தெரிவித்துள்ளார்.
"குறித்த 310 பேரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதத் தொடர்புகளுமின்றித் தவிக்கின்றனர். நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த சிலரைப் படகுகள் மூலம் மீட்டுள்ளோம். கூராய் பிரதேசத்தில் 36 பேர் தொடர்புகளின்றி மரங்களிலும், கூரைகளின் மீதும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். கடற்படையினரின் மீட்புப் பணிக்காகச் சென்ற படகு, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் பாதிக்கப்பட்ட மக்களை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக விமானப்படையின் உதவியையும் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி மீண்டும் வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
- மன்னார் நிருபர் லெம்பட்-

Post a Comment