Header Ads



பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் மோகனனின் மரண அறிவித்தல்


ஐவேளை தொழுகை அழைப்பு பாங்கொலிக்க பயன்படும் பள்ளிவாசல் மைக் காலை 8 மணிக்கு ஆன் செய்த சப்தம் கேட்டவர்கள் ஜமாஅத் பகுதியில் யாரோ ஒருவர் வபாத் ஆன தகவல் தெரிந்து கொள்ள காதுகொடுத்து கேட்டனர்.


ஆனால், இந்தியா ஆலப்புழா மாவட்டம் மண்ணஞ்சேரி குப்பேளம் முஹ்யித்தீன் மஸ்ஜித் மைக்கில் அறிவிப்பு செய்தது, மோகனன் என்பவரது மரண தகவல். 62 வயதான மோகனன் என்பவர் பள்ளிவாசல் அருகில் வசிப்பவர்.


அந்த பகுதியில் அனைவருடனும் நல்ல நட்புடன் பழகுபவர். 2 தினங்கள் முன்பு திடீரென அதிகாலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தவரை சுப்ஹு தொழுகைக்கு வந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மோகனனின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வரவும் முஹ்யித்தீன் மஸ்ஜித் கமிட்டி தலைவர், செயலாளர், இமாம் உட்பட சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். கூடவே அவரது குடும்பத்தினருடன் பேசி இறுதிச்சடங்கு நேரம் அறிந்து, பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அவரது மரண அறிவிப்பை செய்தது மோகனனின் உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தவரிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Colachel Azheem

No comments

Powered by Blogger.