Header Ads



இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 4,500 முறைப்பாடுகள்


2025 ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 4,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. 


85 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள், அவர்களின் எண்ணிக்கை 19 பேர் ஆகும். 


கைது செய்யப்பட்டவர்களில் அரசியல்வாதிகள், அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்டவர்களும் அடங்குவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 


இலஞ்சம் வாங்கியதற்காக 36 வழக்குகளும், ஊழல் குற்றத்திற்காக 15 வழக்குகளும், முறைக்கேடாக சொத்துக்கள் ஈட்டியமைக்காக 10 வழக்குகளும் 75 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.