Header Ads



ட்ரம்பின் இந்தியா மீதான நடவடிக்கையினால் இலங்கைக்கும் பாதிப்பு


அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான அதிக வரியானது, 2026 ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி வீதத்தை குறைவடையச் செய்யுமென உலக வங்கி தெரிவித்துள்ளது. 


2025ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு 5.8 சதவீதமாகக் கடுமையாகக் குறைவடையும் எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இதற்குள் அடங்குகின்றன.

No comments

Powered by Blogger.