Header Ads



பெண்கள் விஷயத்தில் ஆண்கள், எவ்வளவு தூரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது தெரியுமா..?


பெண்கள் விஷயத்தில் ஆண்கள், எவ்வளவு தூரம் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது தெரியுமா..?


1. ஒருவன் மனைவிக்கு துரோகமிழைத்து விபசாரத்தில் ஈடுபட்டால் அவன் கல்லெறிந்து கொல்லப்படுவான்.


2. இரண்டாவது திருமணம் செய்து மனவியரை சமமாக நடத்தாவிட்டால், ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் மறுமையில் வருவான்.


3. மஹர் தொகையை கொடுக்காவிட்டால் மறுமையில் அவன் திருடன்.


4. மணவிலக்குச் செய்துவிட்டால் கொடுத்த எதையும் மனைவியிடமிருந்து திரும்ப வாங்கக் கூடாது.


5. மனைவிக்கான வாரிசு சொத்தை கொடுக்காவிட்டால், அல்லாஹ்வின் வரம்பை மீறியவன். அதற்குக் கொடிய தண்டனை உண்டு.


6. மனைவியை அடிப்பவன் சாபத்துக்கு உரியவன்.


7. நான்கு மாதங்களுக்கு மேல் மனைவியை வெறுத்து ஒதுக்கினால் விவாகரத்துக் கோரும் உரிமை மனைவிக்கு உண்டு.


8. "நீ என் தாயைப் போன்றவள்” என்று அவளிடம் கூறினால், 60 நாட்கள் தொடர் நோன்பு வைக்கணும். இல்லையேல் ஓர் அடிமையை விடுதலை செய்யணும். அதுவும் இல்லையேல் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். 


9. மனைவியை வெறுத்தால் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்.


10. மனைவிக்கு என தனியாக செல்வம் இருந்தால், அது அவளுக்கு மட்டுமே உரியது. அவளது அனுமதியின்றி அதில் கைவைக்க கணவனுக்கு உரிமை இல்லை.


11. மனைவியின் கண்ணியம் காக்க போராடி மரணித்தால், இறைப் பாதையில் உயிர் தியாகம் செய்த பலன் (ஷஹீத்).


12. மனைவி மீது கணவன் அவதூறு கூறினால், அவனுக்கு 80 கசையடிகள் வழங்கப்படும்.


13. மணவிலக்கு செய்தால் 'இத்தா’ எனும் காத்திருக்கும் காலத்தில் அவளுடைய எல்லா செலவுகளுக்கும் கணவனே பொறுப்பு.


14. ஒரு நபித்தோழியின் கண்ணியம் காக்க பனூ கைனகா கோத்திரத்திற்கு எதிராக நபிகளார் போர் தொடுத்தார்கள்.


15. ரோமபுரியில் கைது செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் சகோதரி, ’’ஓ.. முஃதசிமா!” என்று அழைத்தாள். அந்த அழைப்புக்காகவே கலீஃபா முஃதசிம், அமோரியர்களுக்கு எதிராக போர் தொடுக்க வீரர்களை அணிவகுத்தார்.


பின்னர் அவர்களுக்கு எழுதினார்: "இந்தக் கடிதம் கண்டவுடன் எனது சகோதரியை மிகுந்த கண்ணியத்துடன் உடனே அனுப்பி வைக்க வேண்டும். இல்லையேல் ஒரு பெரும் படையை அனுப்புவேன். அந்தப் படையின் முதல் வீரன் உன்னிடத்திலும், கடைசி வீரன் என்னிடத்திலும் இருப்பான்”.


வேறு எந்த மதத்திலோ, சித்தாந்தத்திலோ பெண்களுக்கு இவ்வளவு உரிமைகள் இருக்குமா என்று தெரியவில்லை.


அல்லாஹ் கூறுகின்றான்: ”பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல!” (2:228)

✍️ நூஹ் மஹ்ழரி

No comments

Powered by Blogger.