Header Ads



இரட்டைக் கொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்


ஹுங்கம, வாடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், போதைப்பொருள் தொடர்பான தகராறு மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவையே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது.


இந்தக் கொலை சம்பவம் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த குழுவால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 28 வயதான இமேஷா மதுபாஷினி மற்றும் அவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த போபசிந்து என அழைக்கப்படும் 28 வயதான பசிந்து ஹேஷன் என்பவர்களாகும்.


சந்தேக நபர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். மேலும் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.


முக்கிய பிரான சந்தேக நபரான அதுபெலேன பிந்து மற்றும் கொலை செய்யப்பட்ட பசிந்து ஆகியோர் சிறிது காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


கொலை செய்யப்பட்ட பசிந்து ஏற்கனவே கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மீன்பிடி படகின் உரிமையாளரை கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

No comments

Powered by Blogger.