Header Ads



வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா


ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்துள்ளதாக தகவல்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன.


2012 மே 17ஆம் திகதி ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் காரில் அவரை பின்தொடர்ந்த குழுவில்  கஜ்ஜாவும் இருந்ததாக அண்மையில் இடம்பெற்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளில் தெரியவந்தது.


தாஜுதீன் கொலை செய்யப்பட்ட நாளில் கஜ்ஜா தங்கியிருந்த இடம் குறித்தும் தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கையை ஆய்வு செய்யும் வகையிலும் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கஜ்ஜா கொலைக்காக துப்பாக்கியை வழங்கியதாக தற்போது வாக்குமூலம் அளித்துள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை  வேட்பாளர் சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.


குறித்த விசாரணைகள் தொடர்பான பி அறிக்கையை சமர்ப்பித்து  அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.


மித்தெனிய பகுதியில் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணகளுக்காக சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதாக, மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

No comments

Powered by Blogger.