வீரஞ்செறிந்த நகரத்தில் நடந்துவந்த அத்துணை அக்கிரமங்களுக்கும்..
ஒரே ஒரு படம், ஓராயிரம் செய்திகள்..!
கடந்த 2 ரண்டு ஆண்டுகளாக வீரஞ்செறிந்த நகரத்தில் நடந்து வந்த அத்துணை அக்கிரமங்களுக்கும், கற்பனை செய்ய முடியாத கொடூரங்களுக்கும், மழலைகளின் மரணங்களுக்கும் பின்புலமாக இருந்துவிட்டு,
‘நெதன் என்னிடம் ஆயுதம் கேட்டார், இந்த ஆயுதம் வேண்டும், அந்த ஆயுதம் வேண்டும் என்று எனக்குத் தெரியாத ஆயுதம் எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்டார். அவை எல்லாமே உலகத்திலேயே மிகச் சிறந்த ஆயுதங்கள். அவற்றை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்’ என்று பேரானந்தப்பட்டு,
ஷாபாஸ், மெலோனி, ஸ்டிராமர், சிசி போன்றோரிடமிருந்து கூச்சமில்லாமல் பாராட்டு பெற்று,
எந்தவிதமான வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமின்றி தன்னை அமைதிக்கான காவலனாகச் சொல்லிக் கொண்டு,
இரண்டு விரல்களை உயர்த்திய போது பளப்பளப்பான நீல வண்ண ஒன்றரை இலட்ச ரூபாய்க் கோட்டுக்கு உள்ளே அணிந்திருந்த வெள்ளைச் சட்டை துருத்திக் கொண்டு வெளிப்பட்டது. அதில் காஸா குழந்தைகளின் இரத்தக் கறை படிந்திருந்தது. கூடவே அமெரிக்காவின் கொடியும் இருந்தது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Post a Comment