3 மாதங்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை
இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தது
அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த 3 மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மின்சார கட்டணங்களை நிலையானதாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், முந்தைய காலாண்டுகளில் மின்சாரசபையின் வருமான உபரியை நுகர்வோருக்கு வழங்க தீர்மானம் மேந்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.

Post a Comment