3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை
குற்றக்குழுவுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு வரை 73 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள் மற்றும் 37 ஏக்கர் காணி, 67 கோடி ரூபாய் பணமும் அவற்றில் உள்ளது.
இன்று -14- நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment