Header Ads



அந்தரங்க உறுப்பில் தங்கம், அறுவை சிகிச்சை செய்து மீட்பு


அந்தரங்க உறுப்பில் மறைத்துவைத்து தங்கம் கடத்திய பெண், கைது செய்யப்பட்டதுடன், அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் பின்னர் தங்கம் மீட்கப்பட்டது.


இந்தியாவில் இருந்து யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டு வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.  கொழும்பை சேர்ந்த இந்த பெண், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


குறித்த பெண் தனது அந்தரங்க உறுப்பில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்தமை பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சையின் பின் தங்கம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்பெண், பாதுகாப்பு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

No comments

Powered by Blogger.