அரசாங்க Mp க்களின் சம்பளம் தொடர்பில் கம்மன்பில முறைப்பாடு
முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் கொடுப்பனவுகளைச் செலவிட முடியாது . 159 அரசாங்க எம்.பி.க்கள் ஒவ்வொரு மாதமும் கூட்டாக ரூ. 30 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற்று, அரசியல் நோக்கங்களுக்காக கட்சி நிதியில் வரவு வைப்பது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும்.
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுத்த முன்பு, தொலைபேசி பில்கள், எரிபொருள், அலுவலக பராமரிப்பு உள்ளிட்ட கட்சி தொடர்பான செலவுகளைச் செலுத்த இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
"இது 159 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியும் சேர்ந்து மாதத்திற்கு ரூ. 30 மில்லியனுக்கும் அதிகமான தொகையை தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம்" என்று அவர் மேலும் கூறினார், இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என்று கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Post a Comment