Header Ads



புதிய உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் அறிவுரை


மக்களுக்காக அர்ப்பணிப்பும், வினைத்திறனும் மிக்க அரச சேவையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திச் செய்யும் பணியில் இணைந்து கொள்ளுங்கள். புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவுரை


மக்களுக்கு உகந்த சேவையை வழங்கும், சுயாதீனமான, திறமையான அரச சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், மக்களுக்காக அர்ப்பணிப்புமிக்க திறமையான அரச சேவையினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திச் செய்யும் பணியில் இணைந்து கொள்ளுமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


முகாமைத்துவ சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் தெரிவாகி நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 1890 விண்ணப்பதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (29) அலரி மாளிகையில் நடைபெற்ற போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.