சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை (வீடியோ)
சீனாவின் விவசாய மற்றும் கிராமிய விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சர் டொங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.
https://www.facebook.com/share/r/1H4PFeYbwr/
முன்னாள் அமைச்சர் டொங் ரெஞ்சியன் 2007 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் உள்ளூர் அளவில் அவர் வகித்த பல்வேறு பதவிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
வணிக நடவடிக்கைகள், திட்ட ஒப்பந்தம் மற்றும் வேலை வழங்குதல் போன்ற விடயங்களில் சட்டவிரோதமாக மொத்தம் 268 மில்லியன் டொலர் ரொக்கமாகவும் மதிப்புமிக்க பொருட்களாகவும் அவர் பெற்றுள்ளார்.

Post a Comment