எவரும் எமக்கு சவால் அல்ல, ரணிலுடன் ஒன்றிணைந்த அனைவரும் நீதிமன்றில் வழக்குகள் உள்ளவர்கள்
திட்டமிட்டு எவரும் கைது செய்யப்படுவதில்லை. எவரும் எமக்கு அரசியல் ரீதியில் சவாலானவர்கள் அல்ல. ரணிலுடன் ஒன்றிணைந்த அனைவரும் நீதிமன்றில் வழக்குகள் உள்ளவர்கள். இவர்கள் ரணில் மீதுள்ள அன்பினால் ஒன்று சேரவில்லை. மாறாக ரணிலுக்கு எதிராக சட்டம் செயல்பட்டு உள்ளது என்றால், அடுத்தது நாங்கள் தான் என்பதை அவர்கள் அறிவார்கள். ஓய்வுப்பெற்ற ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் தொடர்பான தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த தீர்ப்பை இவ்வாரம் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பார். இதன் பின்னர் ராஜபக்ஷர்கள் மீண்டும் மெதமுலனவுக்கு செல்ல நேரிடும்.
(பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்)

Post a Comment