Header Ads



ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட உள்ளேன் - கம்மன்பில புலம்பல்


தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


குற்றப் புலனாய்வுத் துறை, கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்திருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கம்மன்பில தெரிவித்த கருத்து தொடர்பில் ஒகஸ்ட் 12 அன்று பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மன்றில் கூறியிருந்தனர்.


குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பல்வேறு சமூகங்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.