Header Ads



ஹாலிவுட் நட்சத்திரங்கள் தயாரிக்கப்போகும் காசா பற்றிய படம்


பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான  பிராட் பிட், ஜோவாகின் பீனிக்ஸ், ரூனி மாரா மற்றும் பலர் காசாவைப் பற்றி ஒரு படத்தைத் தயாரிக்க போவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


காசாவில் இறுதி வரை, அவசர சேவைகளுடன் தொலைபேசியில் இருந்த 6 வயது ஹிந்த் ரஜாப்பின் கதையை படமாக்க உள்ளனர்.


அவளைக் காப்பாற்ற ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் துணை மருத்துவர்கள் அனுப்பப்பட்டனர். ஆனால் ஹிந்த கொலை செய்யப்பட்டாள். பின்னர் அவளுக்கு உதவச்சென்ற மருத்துவர்களும்  கொலை செய்யப்பட்டனர்.


6 வயது ஹிந்த் பயணித்த கார் 335 தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருந்தமை, இந்தச் சம்பவத்தின் கொடூரத்தை உலகிற்கு உணர்த்தியது.


பல தசாப்தங்களாக ஹாலிவுட் உலகம் இஸ்ரேலுக்கு சார்பாக செயற்பட்ட நிலையில், தற்போது மௌனம் உடைத்திருப்பதாகவும், இது வரலாற்று சிறப்புமிக்கது எனவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.