Header Ads



அப்துல்லாஹ் MMC விடுத்துள்ள அறிவித்தல்


முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிலந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறை என்பவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை (18.08.2025) வடக்கு கிழக்கில் முன்னெடுக்கபடவுள்ள ஹர்த்தாலுக்கு (கதவடைப்பிற்கு) தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைந்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கின்றார்கள்.


வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள அதிகரித்த இராணுவ பிரசன்னத்தின் மூலமாக உண்மையிலேயே மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. இராணுவ மயமாக்கலை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் நீண்டகாலமாகவே எதிர்த்து வருகின்ற நிலையில் அடக்கு முறையுடன், உயிர்ப்பலிகளும் இடம்பெறுவது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.


எனவே நாளை (18) இடம்பெறும் பூரண ஹர்த்தால் (கதவடைப்பு) நடவடிக்கையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்களாக பங்கெடுப்பதுடன், வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் - ஒற்றுமையையும் இதன் மூலம் வெளிக்காட்டுவதற்கு திடசங்கற்பம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி.

இவ்வண்ணம்

என்.எம்.அப்துல்லாஹ்

யாழ் மாநகர சபை உறுப்பினர்

யாழ்ப்பாணம்

No comments

Powered by Blogger.