Header Ads



நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்


நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.  யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார். 


குறித்த பெண்ணின் நண்பி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார். 


அண்மையில் அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் நேற்றைய தினம் (16) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார். 


(கஜிந்தன்)

No comments

Powered by Blogger.