7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய சபை
⭕️ அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் நடைபெற்றது.
⭕️ 7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூடியது
⭕️ அனர்த்த முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் இணைக்க திட்டம்
⭕️தற்காலத்திற்கு ஏற்றவாறு அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
⭕️ இலங்கையில் அனர்த்தங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய போக்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளுக்கான மைய செயல்பாட்டுடன் கூடிய ஒற்றை அமைப்பின் தேவை தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.
⭕️ அத்தோடு,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான தற்போதைய நிதி வரம்புகளை திருத்துதல், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
⭕️தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
⭕️அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வீடுகளை அடையாளம் காண்பதை விரைவுபடுத்தவும், அந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றவும், அவர்களின் பாதுகாப்பை ஆராயவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
⭕️வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்தார்.

Post a Comment