Header Ads



50 லட்சம் ரூபாய் பெறுமதியான (திமிங்கல வாந்தி) யை வைத்திருந்தவர்கள் கைது


அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. 


சந்தேக நபரின் வசம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 


அதன் பெறுமதி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது. 


இது தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.