மத்தியகிழக்கு பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கை தேவை - இலங்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ள இலங்கை, மத்திய கிழக்கின் சமீபத்திய பதற்றங்கள் குறித்து இலங்கை மிகுந்த கவலை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
அத்துடன், "நிலைமையைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பி, அமைதியை நிலைநாட்டவும் பராமரிக்கவும் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட வேண்டும்" என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post a Comment